Home இலங்கைமன்னார் கலை மன்றங்களுக்கு இடையில் எதிர்வரும் 29 ஆம் திகதி நடன, நாடகப் போட்டிகள் :

மன்னார் கலை மன்றங்களுக்கு இடையில் எதிர்வரும் 29 ஆம் திகதி நடன, நாடகப் போட்டிகள் :

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மாகாணத்திலுள்ள பதிவு செய்யப்பட்ட கலை, இலக்கிய மன்றங்களுக்கு இடையில் நடாத்தும்; ஆக்கத்திறன் போட்டிகளில் மன்னார் மாவட்ட மட்டத்திலான நடன, நாடகப் போட்டிகள் எதிர்வரும் 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிமுதல் மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெறவுள்ளதாக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி.குணபாலன் தெரிவித்தார்.

குறித்த போட்டிகளுக்காக விண்ணப்பித்த கலை, இலக்கிய மன்றங்கள் மேற்படி நடன,நாடகப் போட்டிகளில் பங்கு பற்ற முடியும். அன்றைய தினம் குழு நடனம், தனி நடனம், வில்லுப்பாட்டு மற்றும் தனிநடிப்பு,நாடகம் ஆகிய போட்டிகள் நடை பெறும்.

இதே வேளை, கலை இலக்கிய மன்றங்களின் ஊடாக பாடலாக்கம், கவிதை மற்றும் சிறுகதை, ஓவியம் உள்ளிட்ட போட்டிகளுக்காக விண்ணப்பித்தவர்களுக்கான மாகாண மட்டப் போட்டிகளும், மாகாண அரச ஊழியர்களுக்கு இடையிலான போட்டிகளுக்காக விண்ணப்பித்த மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த அரச அலுவலர்களுக்கான பாடலாக்கம், கவிதை மற்றும் சிறுகதைப் போட்டிகளும், எதிர் வரும் 2ஆம் திகதி (02.06.2018) சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் மன்னார் நகரம் பிரதேச செயலாளர் அலுவலகத்திலும் நடைபெறும் என மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி.குணபாலன் மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More