161
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஸவின் பொருளாதாரக் கொள்கை மிகவும் பொருத்தமானது என அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்றைய தினம் மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடாதிபதிகளை சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அண்மையில் பதுளையில் கோதபாய ராஜபக்ஸ கருத்து வெளியிட்டிருந்தார்.
கோதபாயவின் இந்தக் கருத்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். கோதபாயவின் இந்தப் பொருளாதாரக் கொள்கை சுதந்திரக் கட்சியினதோ அல்லது கூட்டு எதிர்க்கட்சியினதோ பழைய பொருளாதாரக் கொள்கைகள் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Spread the love