118
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
இந்த அரசாங்கம் தொடர்ந்தும் நீடித்தால் மக்கள் தற்கொலை செய்து கொள்ள நேரிடும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தற்பொழுது நாட்டு மக்கள் வாழ்வதற்கு முடியாத ஓர் நிலையில் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
கண்டி மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்ததன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ அண்மையில் முன்மொழிந்திருந்த பொருளாதார யோசனைத் திட்டம் மிகவும் காத்திரமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Spread the love