குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கரீபியன் தீவுகளின் பார்பேடோஸில் முதல் பெண் பிரதமராக மியா மொட்டலி தெரிவு செய்யப்பட்டுள்ளார். 1966ம் ஆண்டு பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றுக் கொண்டதன் பின்னர் முதல் தடவையாக பெண் ஒருவர் பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
52 வயதான மொட்டலி பார்பேடோஸ் தொழிற் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டியுள்ளார். தேர்தலில் பார்பேடோஸ் தொழிற் கட்சி 30 ஆசனங்களையும் வெற்றியீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சட்டத்தரணியான மொட்டலி, சிறு வயதில் தனது ஆசிரியையிடம் தாம் நாட்டின் முதல் பெண் பிரதமராக பதவி வகிப்பேன் என கூறியிருந்தார் எனத் தெரிவிக்;கப்படுகிறது. பத்து ஆண்டுகளாக ஆட்சியில் நீடித்து வந்த பார்பேடோஸ் ஜனநாயகக் கட்சி தேர்தலில் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது