கொரிய தீபகற்பத்தில் இருந்து அணு ஆயுதங்களை ஒழிக்க வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங்-உன் விரும்புவதாகவும் எனினும் தமது அரசின் உறுதித் தன்மைக்கு அமெரிக்கா உத்தரவாதமளிக்குமா என்பதை அவரால் உறுதிப்படுத்த முடியவில்லை எனவும் தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் தெரிவித்துள்ளார்.
மேலும் வட கொரியாவின் நோக்கங்களை உறுதிப்படுத்திக்கொள்ள அமெரிக்காவும் அந்த நாடும் நேரடியாகப் பேசவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் வடகொரியத் ஜனாதிபதி கிம் ஜோங்-உன்னை சந்தித்த பின்னர் அவர் இந்தக் கருத்தினை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை முன்பு திட்டமிட்டபடி ஜூன் 12ம் திகதி திட்டமிட்டபடி சிங்கப்பூரில் உச்சிமாநாடு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வாஷிங்கடனில் தெரிவித்துள்ளார்
முன்னதாக வெளிப்படையான விரோதத்தையும் பெருங்கோபத்தையும் வடகொரியா வெளிப்படுத்தியதாகக் கூறி இந்த சந்திப்பை ரத்து செய்வதாகத் தெரிவித்திருந்த டிரம்ப் தெரிவித்திருந்தநிலையில் தாம் எப்போதும் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகத் வடகொரியா தெரிவித்திருந்தது.
இந்நிலையில் மீண்டும் திடீர் திருப்பம் ஏற்பட்டு திட்டமிட்டபடி ஜூன் 12ம் திகதியே பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் இ அந்தத் திகதியைத் தாண்டியும் பேச்சு நடக்கலாம் எனவும் தெரிவித்திருந்தாh என்பது குறிப்பிடத்தக்கது