குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
அவுஸ்திரேலிய தேசிய வங்கியில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையில் பெரும் எண்ணிக்கையிலான வங்கியின் வாடிக்கையாளர்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
நாடு முழுவதிலும் இந்த தொழில்நுட்ப கோளாறு நிலவியவதாகத் தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக பணத்தை மீளப் பெற்றுக் கொள்ளவோ அல்லது வங்கிச் சேவைகளை பெற்றுக்கொள்ளவோ முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது. வங்கியின் சேவை குறித்து வாடிக்கையாளர்கள் இணைய ஊடகங்களிலும், சமூக ஊடக வலையமைப்புக்களிலும் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டிருந்தனர். நாடு முழுவதிலும் இந்த நிலைமை நீடித்துள்ளதுடன், வாடிக்கையாளர்களிடம் வங்கி மன்னிப்பு கோரியுள்ளது.