உலகம் பிரதான செய்திகள் விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சம்பியன் ஜெலினா அஸ்டாபென்கோ – வீனஸ் வில்லியம்ஸ்; தோல்வி


பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சம்பியன் ஜெலினா அஸ்டாபென்கோ(Jelena Astabenko)  தோல்வியடைந்துள்ளார். நேற்றையதினம் பாரிஸ் நகரில் ஆரம்பமான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் லாத்வியா வீராங்கனையான ஜெலினா அஸ்டாபென்கோ 5-7, 3-6 என்ற நேர் செட் கணக்கில் உக்ரைனின் கத்ரினா கோஸ்லோவாவிடம் தோல்யிடைந்துள்ளார்.

பிரெஞ்ச் ஓபன் தொடரில் நடப்பு சம்பியன் முதல் சுற்றுடன் வெளியேறுவது கடந்த 13 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.அதேவேளை சீன வீராங்கனை வாங் குயாங்கிடம் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ்; 6-4, 7-5 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்துள்ளார்.

முன்னதாக நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் 6-1, 6-4, 7-6 (7-1) என்ற நேர் செட்டில் எகிப்தின் முகமது சவாத்தை தோற்கடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.