Home உலகம்பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சம்பியன் ஜெலினா அஸ்டாபென்கோ – வீனஸ் வில்லியம்ஸ்; தோல்வி

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சம்பியன் ஜெலினா அஸ்டாபென்கோ – வீனஸ் வில்லியம்ஸ்; தோல்வி

by admin


பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சம்பியன் ஜெலினா அஸ்டாபென்கோ(Jelena Astabenko)  தோல்வியடைந்துள்ளார். நேற்றையதினம் பாரிஸ் நகரில் ஆரம்பமான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் லாத்வியா வீராங்கனையான ஜெலினா அஸ்டாபென்கோ 5-7, 3-6 என்ற நேர் செட் கணக்கில் உக்ரைனின் கத்ரினா கோஸ்லோவாவிடம் தோல்யிடைந்துள்ளார்.

பிரெஞ்ச் ஓபன் தொடரில் நடப்பு சம்பியன் முதல் சுற்றுடன் வெளியேறுவது கடந்த 13 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.அதேவேளை சீன வீராங்கனை வாங் குயாங்கிடம் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ்; 6-4, 7-5 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்துள்ளார்.

முன்னதாக நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் 6-1, 6-4, 7-6 (7-1) என்ற நேர் செட்டில் எகிப்தின் முகமது சவாத்தை தோற்கடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More