176
அரபிக்கடலில் உருவான மெகுனு புயல் தெற்கு ஓமன் மற்றும் ஏமன் நாடுகளை பயங்கரமாக தாக்கியதனால் இதுவரை 11 பேர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏமனில் உள்ள சொகோட்ரா தீவில் மணிக்கு 170 கி.மீ. வேகத்தில் கடுமையான சூறாவளி காற்று வீசியதுடன் கனமழையும் பெயதமையினால் நிலச்சரிவும் ஏற்பட்டது.
இதில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் அவர்கள் மூவர் இந்தியர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும்சிலரைக் காணவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல், மழையால் பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love