குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
பேர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸிடம் பணம் பெற்றுக்கொள்ளவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். பொரளை என்.எம். பெரேரா கேந்திர நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் பணிகளுக்காக செல்வந்தர்களிடம் பணம் பெற்றுக் கொள்வதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசிறி கஜதீரவும் இதே கருத்தை வெளியிட்டுள்ளார். தாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அலோசியஸிடம் பணம் பெற்றுக்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக செல்வந்த வர்க்கத்தின் பணம் பெற்றுக்கொள்வதில்லை என அவர் கூட்டிக்காட்டியுள்ளார்.