குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
பலாலி வானூர்தி தளத்தினை அபிவிருத்தி செய்ய 724 ஏக்கர் பரப்பளவு போதுமானது என இணக்கம் காணப்பட்டுள்ளது. ஏற்கனவே வானூர்தி தள விஸ்தரப்பிற்காக 1000 ஏக்கர் காணி தேவை என வான் படையினர் அடம்பிடித்த நிலையில் நேற்றைய யாழ் செயலக கூட்டத்தில் 724 ஏக்கரில் அபிவிருத்தியை மேற்கொள்ளலாம் என உடன்பாடு காணப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் பிராந்திய விமான நிலையமாக பலாலி தரமுயர்த்தப்பட உள்ளதாக தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதற்கு 724 ஏக்கர் பரப்பளவே போதுமானது என இந்திய தரப்பினர் தெரிவித்துள்ள நிலையில் விரிவாக்க செயற்பாடுகளை விரைவில் ஆரம்பிப்பதில் பிரச்சனை இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
1980 ஆம் ஆண்டில் பாலாலி வானூர்தி நிலையத்தின் விஸ்த்தரிப்பிற்காக 600 ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட்டது. தொடர்ச்சியாக 400 ஏக்கர் சுவிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் 124 ஏக்கர் காணி மட்டும் சவீகரிக்கப்பட்டு விரைவில் விஸ்த்தரிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.