Home இலங்கைபாதசாரிக் கடவையில் காவற்துறையின் வாகனம் மோதி வட்டுக் கோட்டையில் முதியவர் மரணம்..

பாதசாரிக் கடவையில் காவற்துறையின் வாகனம் மோதி வட்டுக் கோட்டையில் முதியவர் மரணம்..

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

வட்டுக்கோட்டை காவற்துறையினரின் மோட்டார் சைக்கிள் மோதியதில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை மேற்கை சேர்ந்த 65 வயதுடைய வேலுப்பிள்ளை மகேந்திரன் என்பவரே உயிரிழந்தவராவர். கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,

வட்டுக்கோட்டை மாவடி சந்தியில் உள்ள கடையில் பொருட்களை கொள்வனவு செய்த பின்னர் பாதசாரி கடவை ஊடாக வீதியை கடக்க முற்பட்ட போது வேகமாக மோட்டார் சைக்கிளில் சென்ற காவற்துறை உத்தியோகஸ்தர் முதியவருடன் மோதி விபத்துக்குள்ளானர். விபத்தில் படுகாயமடைந்த முதியவரை அங்கிருந்தவர்கள் மீட்டு யாழ்.போதான வைத்திய சாலையில் அனுமதித்தனர். கடந்த மூன்று நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை சிகிச்சை பயனின்றி முதியவர் உயிரிழந்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More