இந்தியா பிரதான செய்திகள்

உத்தரப் பிரதேசத்தில் இடி – மின்னல் தாக்கியதில் 9 பேர் பலி

உத்தரப் பிரதேசத்தில் இடி மற்றும் மின்னல் தாக்கியதில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் பல பகுதிகளில் திங்கட்கிழமை இடி மற்றும் மின்னல் தாக்கியதாகவும் அன்னோ மாவட்டத்தில் 5 பேரும் கான்பூர் மற்று ரே பரேலியில் 4 பேர் பேரும் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசம் மட்டுமல்லாது ஜார்கண்ட், பிஹாரிலும் திங்கட்கிழமையன்று இடி, மின்னல் தாக்கியதில் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதாகவும், காற்று மணிக்கு 50 முதல் 70 கி.மீ. வேகத்தில் வீசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.