குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
இலங்கையில் மத வழிபாட்டுத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள மதச் சுதந்திரம் பற்றிய வருடாந்த அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டிலும் இலங்கையில் சிறுபான்மை மதத்தினர் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவாலயங்கள் மீது தாக்குதல், பாஸ்டர்கள் மீதான தாக்குதல்கள் அடக்குமுறைகள் மற்றும் வழிபாட்டு நிகழ்வுகள் மீது தாக்குதல் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீது அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதாகத் தெரிவித்துள்ளது.