உலகம் பிரதான செய்திகள்

ரஸ்ய சர்வாதிகார அரச இயந்திரம் அர்கடி பாப்சென்கோவின் கொள்கை நிலைப்பாட்டையும், நேர்மையையும் மன்னிக்காது…

2ஆம் இணைப்பு…

ரஸ்யாவைச் பிரபல பத்திரிகையாளரான அர்கடி பாப்சென்கோ உக்ரைனின் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதன் பின்னணியில் ரஸ்யா இருப்பதாக உக்ரைன் பிரதமர் வளோடிமிர் ஹரோய்ஸ்மேன் குற்றம் சுமத்தியுள்ளார். ரஸ்ய சர்வாதிகார அரச இயந்திரம் பத்திரிகையாளர் அர்கடி பாப்சென்கோவின் கொள்கை நிலைப்பாட்டையும், நேர்மையையும் மன்னிக்காது என தான் உறுதியாக நம்புகிறேன் எனவும் அவர் தனது முகப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.

அர்கடி பாப்சென்கோ உயிர்அச்சுறுத்தல் காரணமாக ரஸ்யாவில் இருந்து வெளியேறி உக்ரைனில் தஞ்சமடைந்து வாழ்ந்து வந்தநிலையில் அவர் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் வாசலில் வைத்து நேற்றையதினம் கொல்லப்பட்டிருந்தார்

இந்தக் கொலை குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ள ரஸ்யா குருதி தோய்ந்த குற்றங்கள் கியாவ் அரசில் தினசரி நிகழ்வாக ஆகிவிட்டது எனவும் கூறியுள்ளது. கிரிமீயாவை 2014 ஆம் ஆண்டு ரஸ்யா தன் பகுதியுடன் இணைத்ததிலிருந்து ரஸ்யா, உக்ரைன் நாடுகளுக்கிடையிலான உறவு சுமூகமாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரஸ்ய பிரபல பத்தரிகையாளர் உக்ரைனில் சுட்டுக்கொலை..

May 30, 2018 @ 03:48


ரஸ்யாவை சேர்ந்த பிரபல பத்திரிகையாளரான அர்கடி பாப்சென்கோ ( ArkadyBabchenko  ) என்பவர் உக்ரைனின் தலைநகர் கெய்வில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் உயிர்அச்சுறுத்தல் காரணமாக ரஸ்யாவில் இருந்து வெளியேறி உக்ரைனில் தஞ்சமடைந்து வாழ்ந்து வந்தநிலையில் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

நேற்றிரவு அவரது வீட்டுக்கு சென்ற  இனந்தெரியாத நபர்கள் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்தநிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.