232
தமிழகத்திலிருந்து ஒளிபரப்பாகும் `சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சிக்கு தமிழக உச்சநீமிமன்றம் தடை விதித்துள்ளது. நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கிய இந்த நிழழ்ச்சி குறித்து ஆரம்பித்தில் இருந்து பல்வேறு தரப்பினராலும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.
இந் நிகழ்ச்சியை ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக இருந்த நிர்மலா பெரியசாமி தொகுத்து வழங்கினார். பின்னர் நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். அதனையடுத்து நடிகை சுதா சந்திரன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். சுதா சந்திரன் தொகுத்து வழங்கியபோது நிகழ்ச்சிக்கான வரவேற்பு குறைந்ததமையால் லக்ஷ்மி ராமகிருஷ்ணனே மீண்டும் இணைக்கப்பட்டார்.
குடும்பங்களில் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் விதமாக `சொல்வதெல்லாம் உண்மை’ இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்படுவதாக கூறப்பட்டது. எனினும் குடும்பங்களிற்குள் காணப்பட்ட அந்தரங்கப் பிரச்சினைகளை வெளியுலகிற்கு காட்டி அதன் மூலம் தமது இருப்பை தக்க வைக்க குறித்த நிகழ்ச்சியும் அதனை ஒளிபரப்பிய தொலைக்காட்சியும் முற்பட்டதாக கூறப்பட்டது.
குறிப்பாக நடுத்தர மக்களை ஏமாற்றி நிகழ்ச்சிக்குள் இழுத்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. நீதிமன்றமும் காவல்துறையும் செய்ய வேண்டிய வேலைகளை ஒரு நடிகையை தொலைக்காட்சியில் வைத்து செய்து கொண்டிருக்கிறார் எனச் சில நடிகைகளே எதிர்ப்புத் தெரிவித்தனர். குறிப்பாக நடிகை ஸ்ரீபிரியா இந்த நிகழ்ச்சியை கடுமையாக எதிர்த்தார்.
அத்துடன் நாகப்பன் என்கிற நபர் இந்த நிகழ்ச்சியால் தற்கொலை செய்து கொண்டதாகக் காவல்துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டது.இந்த நிலையிலேயே குறித்த நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்துமாறு சென்னையில் உள்ள உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது
Spread the love