தொலைக்காட்சி நட்சத்திரமான ரோஸன்னி தனது ருவிட்டர் பக்கத்தில் நிறவெறியோடு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் உதவியாளர் வலெரீ ஜெரெட் குறித்து வெளியிட்ட கருத்து கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் பங்கேற்று வழங்கிவந்த நகைச்சுவை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது ஏபிபி நெட்வேர்க் சனல் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியை ரத்துசெய்துவிட்டதாக ரிபோர்ட்டர்ஸ் சிஎன்என்.கொம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரோஸன்னியின் ருவிட்டர் அறிக்கை வெறுக்கத்தக்க வகையில் உள்ளது எனவும் தாங்கள் கொண்டுள்ள விழுமியங்களுடன் சற்றும் பொருந்தக்கூடிய வகையில் அவரது ருவிட் அமைந்திருக்கவில்லை எனவும் இதனால் அவருடைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ரத்துசெய்ய முடிவு செய்துள்ளோம் என இதுகுறித்து ஏபிசி நெட்வேர்;க் சனல் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தநிலையில் இதற்காக தான் மன்னிப்புக் கேட்பதாகவும் தான் ருவிட்டரை விட்டு வெளியே வந்துவிட்டதாகவும் ரோஸன்னி தெரிவித்துள்ளார்.
பார்வையாளர்களின் மிகச்சிறந்த வரவேற்பை பெற்று தரவரிசையில் முதன்மையான இடத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த இத்தொலைக்காட்சி நிகழ்ச்சி தொடங்கிய சில மாதங்களிலேயே பாதியிலேயே ரத்துசெய்யப்பட்டுள்ளமை ரோஸன்னிக்கு கவலையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.