நக்சல் நடமாட்டம் அதிகமுள்ள ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தில் உள்ள லுகு பாஹர் பகுதியில் நேற்று முன்தினம் பாதுகாப்புப் படையினரும் மாவட்ட ஆயுதப் படை காவல்துறையினரும் இணைந்து மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது அங்கு ஏராளமான ஆயுதங்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 மாதங்களுக்கு முன் கைதான மாவோயிஸ்ட் சுனில் மஜி என்பவரிடம் மேற்கொண்ட விசாரணையில் கிடைத்த தகவலின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏராளமான ஆயுதங்களுடன் 3 லட்சம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. . கைதான மாவோயிஸ்ட் சுனில் மஜி, அப்பகுதிக்கு மாவோயிஸ்ட்களின் தலைவர் போல செயல்பட்டு வந்தார் எனவும் இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது எனவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.