146
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் – யாழ்ப்பாணம்..
யாழ்.வீரசிங்கம் மண்டபத்திற்கு அருகில் பாடசாலை மாணவி ஒருவரின் பாடசாலை சீருடை மற்றும் கழுத்தப்பட்டி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபரிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டது என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். அதன் போது, பாடசாலை மாணவிகள் எவருக்கும் எந்தவொரு பிரச்சினைகளும் இல்லை என ஆராய்ந்து உறுதிபட அவர் தெரிவித்தார் எனவும்,
யாழ். வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் அண்மையில் இடம்பெற்ற விளையாட்டு போட்டி ஒன்றில் தமது பாடசாலை மாணவிகளும் பங்கேற்றதாகவும் அதற்காக மாணவிகள் அங்கு தங்கியிருந்ததாகவும், அந்தவேளையி ல் தவறவிடப்பட்டதாக இந்த சீருடை அடங்கிய பொதி இருக்கலாம் என அதிபர் விசாரணையின் போது தெரிவித்தார் என பொலிஸார் தெரிவித்தனர்.
யாழில் பாடசாலை மாணவியின் – சீருடை – உள்ளாடைகள் – கழுத்துப்பட்டி -செருப்பு மீட்பு..
May 31, 2018 @ 09:10
யாழ்.வீரசிங்கம் மண்டபத்திற்கும் புல்லுக்குளத்திற்கும் இடையில் வீதியோரமாக உள்ள மரத்தடியில் இருந்து பாடசாலை மாணவி ஒருவரின் சீருடை உட்பட சில உடமைகளை காவற்துறையினர் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட உடமைகள் அச்சுவேலி இடைக்காடு மகா வித்தியாலய மாணவி ஒருவருடையது என்றும், சீருடை, உள்ளாடைகள், பாடசாலை கழுத்து பட்டி, செருப்பு, உட்பட சில உடமைகள் மீட்கப்பட்டுள்ளது எனவும் யாழ். காவற்துறை நிலைய தடயவியல் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love