ஐசிசி உலக லெவன் அணியுடனான இருபதுக்கு இருபது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 72 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது. ஐ.சி.சி. உலக லெவன் மற்றுட் மேற்கிந்திய தீவுகள் அணிக்குமிடையேயான ஒரேயொரு இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
உலக லெவன் அணிக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷகீத் அப்ரிடி தலைவராகவும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு பிராத்வெயிட் தலைவராகவும் உள்ள நிலையில் நாணயச்சுழற்சியில் வென்ற உலக லெவன் அணி களத்தடுபிபனை தெரிவு செய்தது.
இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 199 ஓட்டங்களைப் பெற்றது. இதனையடுத்து 200 என் வெற்றிஇலக்குடன் களமிறங்கிய உலக அணி 16.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 127 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இதனைத் தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் அணி 72 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.