“அதிகாரப்பகிர்வை வலியுறுத்துகின்ற வாசுதேவநாணயக்கார, ராஜா கொல்லுரே, திஸ்ஸவிதாரண போன்றோர் எமது தரப் பிலேயே இருக்கின்றனர்”
“வடக்கு, கிழக்கு, தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வை எமது தரப்பினால் மட்டுமே வழங்க முடியும். அதிகாரப்பகிர்வை வலியுறுத்துகின்ற வாசுதேவநாணயக்கார, ராஜா கொல்லுரே, திஸ்ஸவிதாரண போன்றோர் எமது தரப் பிலேயே இருக்கின்றனர்” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண என்ன செய்யவேண்டும் என்பது தொடர்பான ஒரு கலந்துரையாடல் கூட்டு எதிரணியின் தலைவர்கள் மட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கொழும்பு இல்லத்தில் நடைபெற்றது. இதில் கருத்து வெளியிட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய தேசியக்கட்சி அதிகாரப்பகிர்வை ஆதரிக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்க மட்டும் அதிகாரப்பகிர்வை விரும் பினாலும் ஐக்கிய தேசியக்கட்சியின் அதிகமானோர் அதிகாரப்பகிர்வை விரும்பவில்லை. எனவே ஐக்கிய தேசியக் கட்சி யினால் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு வழங்க முடியாது. ஆனால் எமது தரப்பினால் இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவை காண முடியும். இதனை தனித்து செய்யவும் முடியாது. எனது ஆட்சிக்காலத்தில் அபிவிருத்திக்கு முக்கியத்துவம் கொடுத்தேன். குறிப்பாக முப்பது வருடகால யுத்தம் முடிவடைந்ததும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதையே நான் நோக்கமாக கொண்டிருந்தேன். அதனடிப்படையிலேயே வடக்கு, கிழக்கை நான் அபிவிருத்தி செய்தேன்.” என தெரிவித்துள்ளார்.
1 comment
திரு. மகிந்த ராஜபக்ஷ அகராதியில், இனப்பிரச்சனைத் தீர்வென்பது, ‘சிறுபான்மைத் தமிழரைச் சிறுகச் சிறுகக் கொன்றொழிப்பதே’, என்பதுதானே அர்த்தம்?
இவர் கூறுவது போல், இவர் தரப்பில், ‘அதிகாரப் பரவலை வலியுறுத்துகின்ற திரு. வாசுதேவ நாணயக்கார, மற்றும் திரு.திஸ்ஸவிதாரண போன்றோர்கள் இருந்தார்கள்தான்! ஆனால், அவர்கள் எப்படி இருந்தார்கள், என்பதே கேள்வி? கை கட்டி, வாய் பொத்திப் பொம்மைகளாக இருப்பதும், இல்லாதிருப்பதும் ஒன்றுதான்! இவரது அமைச்சரவையில் எந்தவொரு அமைச்சருக்காவது சுயமாகச் சிந்தித்துச் செயலாற்றும் அதிகாரம் வழங்கப்பட்டிருந்ததா, என்ற கேள்விக்கான இவரது பதில் என்ன?