164
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பல பகுதிகளில் இடி, மின்னல் தாக்கியதன் காரணமாக நேற்றையதினம் ஒரே நாளில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக இடி மின்னல் தாக்கி பலர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் பல்வேறு பகுதிகளில் மரங்கள், வீடுகள் இடிந்து விழுவதனாலும் பொதுமக்களின் இயல்பு வாழ்வுநிலை பாதிகப்பட்டள்ளது.
இந்நிலையில், நேற்று உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. இந்த மழை காரணமாக பல மாவட்டங்களில் இடி தாக்கி 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும், பாதிக்கப்பட்ட 9 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love