183
இலங்கை கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் வீட்டுக்கு ஒரு வார கால காவற்துறைப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.அந்த வகையில் கடந்த 24 ஆம் திகதி இரத்மலானையில் தனஞ்சய டி சில்வாவின் தந்தை ரஞ்சன் டி சில்வா இனந்தெரியாதோரின் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்தார்.
இதனையடுத்து ரஞ்சன் டிசில்வாவின் கொலை தொடர்பான விசாரணையை குற்றப்புலானய்வு திணைக்களம் மேற்கொண்டு வரும் நிலையில் இரத்மலானையிலுள்ள அவரது வீட்டுக்கு தற்போது காவற்துறைப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love