ரஸ்யாவிடம் இருந்து விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்கினால், கட்டார் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என சவூதி அரேபியா எச்சரிக்கை விடுத்துள்ளது. கட்டார் அரசு பயங்கரவாதத்திற்கு உதவி செய்வதாக தெரிவித்து வளைகுடா நாடுகள் அந்நாட்டுடனான உறவினை துண்டித்துள்ள நிலையில் கடந்த வருடம் ரஸ்யாவுடன் ஆயுதங்களைக் கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்தில் கட்டார் கையெழுத்திட்டது.
அதன்படி அடுத்த ஆண்டு விமானங்களை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை வாங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சவூதி மன்னர் சல்மான் கட்டார் ஏவுகணை வாங்குவதை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்க தாமது அரசு தயாராக இருப்பதாகவும், தேவைப்பட்டால் ராணுவத்தை பயன்படுத்தவும் தயார் எனவும் தெரிவித்துள்ளார்.
சவூதி மன்னர் சல்மான் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரான்ஸ் ஜனாதிகதி இந்த விவகாரத்தில் தலையிட்டு ஆயுத பரிமாற்றத்தை தடுத்து அமைதி நிலவ வழிசெய்யுமாறும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது