201
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வெனிசுலா அரசாங்கம் 39 எதிர்க்கட்சி செயற்பாட்டாளர்களை விடுவிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் இவ்வாறு வெனிசுலாவில் எதிர்க்கட்சி செயற்பாட்டாளர்கள் விடுதலை செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி நிகலோஸ் மருடுவோவிற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களே கைது செய்யப்பட்டிருந்தனர். தற்போது குறித்த எதிர்க்கட்சி செயற்பாட்டாளர்களை விடுதலை செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெனிசுலாவில் 2014ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையில் 170 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
.
Spread the love