குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தேசிய ஒருமைப்பாடு,நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் ‘இலங்கையர் எம் அடையாளம்’ பன்மைத்துவம் எம் சக்தி எனும் கருப்பொருளில் மும்மொழிகளிலும் பிரசுரிக்கப்பட்ட ஸ்ரிக்கர்கள் இன்று திங்கட்கிழமை (4) மதியம் மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரச பேரூந்துகளில் ஒட்டப்பட்டுள்ளது.
இலங்கை அரச போக்குவரத்து சேவையின் வட பிராந்திய தலைவர் கேதீஸ்வரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் அமைச்சர் மனோ கணேசன்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், தேசிய ஒருமைப்பாடு,நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் செயலாளர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய உற்பட அதிகாரிகள் கலந்து கொண்டு மக்களுக்கு விழிர்ப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குறித்த ஸ்ரிக்கர்களை பேரூந்துகளில் ஒட்டி வைத்தமை குறிப்பிடத்தக்கது.