சவூதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்காக உரிமங்கள் அளிக்கும் பணிகள் நேற்றையதினம் ஆரம்பமாகியுள்ளன. சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக பெண்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளிப்பது, விளையாட்டு மைதானங்களுக்குள் அனுமதி, திரையரங்குகளுக்கு அனுமதி உட்பட பல சட்டங்கள் இயற்றப்பட்டன.
பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான துன்புறுத்தல் செய்யும் நபர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 3 லட்சம் ரியால்கள் அபராதமும் விதிக்க முடிவு செய்யப்பட்டு இதற்கு அமைச்சரவையும் ஒப்பதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சவூதி அரேபியாவில் பெண்களுக்கு வாகன ஓட்டுநர் உரிமம் வழங்கும் பணிகள் நேற்று ஆரம்பமாகியுள்ளது. அதன்படி நேற்று 10 பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது