குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரபல தொலைக்காட்சி அறிவிப்பாளரும், ஊடகவியலாளருமான ஹேம நலீன் கருணாரட்ன காலமானார். ஹேம நலின் கருணாரட்ன, இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம், ஸ்வர்ணவாஹினி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் கடமையாற்றியுள்ளார்.
இறுதியாக அவர் ஹெரிடேஜ் ரீ.வி என்னும் செய்மதி தொலைக்காட்சியின் உரிமையாளராக கடயைமாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இறக்கும் போது அன்னாருக்கு 55 வயது என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, ஹேமநலின் கருணாரட்னவின் மரணம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவரது மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும் அது குறித்து விசாரணை நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.