191
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அர்ஜூன் அலோசியஸிடம் பணத்தை பெற்றுக்கொண்டவர்களில் கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களும் இருப்பதாக ராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார். தனது தேர்தல் பணிகளுக்கு தமது கிராம மக்களே உதவியதாகவும் அலோசியஸ் எந்த பணத்தையும் தனக்கு வழங்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
அலோசியஸிடம் பணத்தை பெற்றுக்கொண்டனர் என சுமத்தப்படும் குற்றச்சாட்டு மிகவும் பாரதூரமானது எனவும் அவர்கள் யார் என்ற விபரத்தை வெளியிட்டாவிட்டால் அனைவரும் திருடர்கள் கூட்டத்தில் சேர்க்கப்பட்டு விடுவார்கள் எனவும் ராஜாங்க அமைச்சர் வெதஆராச்சி குறிப்பிட்டுள்ளார்.
Spread the love