258
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. தினேஷ் சந்திமல் தலைமையிலான இலங்கை அணி, மேற்கிந்திய தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட்; போட்டி தொடரில் விளையாடுகிறது.
அந்தவகையில் முதலாவது போட்டி போர்ட் ஒப் ஸ்பெயினில் இன்று புதன்கிழமை இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகின்றது. ஜாசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்திய தீவு அணி இந்த ஆண்டில் ஆடும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும்.இலங்கை அணி இதுவரை மேற்கிந்திய தீவு மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love