173
ஏறாவூர், மாவடிவேம்பு பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டு உள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று (06.06.18) மீட்கப்பட்ட இந்த சடலம், மாவடிவேம்பு கிராமத்தைச் சேர்ந்த 22 வயதுடைய சந்திரமோகன் கிருபைராசா என்ற குடும்பஸ்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் நுண்கடன் பிரச்சினை காரணமாக உயிரிழந்துள்ளதாக காவற்துறையின் ஆரம்பகட்ட விசாரணைகளில் அறியப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மரணம் தொடர்பில் ஏறாவூர் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Spread the love