குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
குவாத்தமாலா எரிமலை வெடிப்புச் சம்பவத்தினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 99 ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தினால் 200 பேர் வரையில் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குவாத்தமாலாவின் பியூகோ எரிமலையே இவ்வாறு வெடித்துச் சிதறி வருகின்றது. தொடர்ந்தும் எரிமலை சீற்றம் காணப்படுவதனால் மீட்புப் பணிகளை முன்னெடுப்பதில் பெரும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை எரிமலை வெடித்ததன் காரணமாக சுமார் 1.7 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எரிமலை தற்போதைக்கு வெடிக்காது என நிபுணர்கள் எதிர்வு கூறியிருந்த நிலையல் இந்த அனர்த்தம் இடம்பெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னெச்சரிக்கை விடுக்கப்படாத காரணத்தினால் அதிகளவான உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.