அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் தொலைதொடர்பு அதிகாரியான கெல்லி சட்லர் (Kelly Sadler) திடீரென பதவி விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் செனட் உறுப்பினரான ஜோன் மெக்கெயின் ( John McCain) பற்றி கடந்த மாதம் கெல்லி சாட்லர் கிண்டல் செய்ததாகத் தொவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நாட்டுக்காக பணியாற்றி தற்போது சிகிச்சையில் இருக்கும் ஒரு அதிகாரியை, வெள்ளை மாளிகை அதிகாரி கிண்டல் செய்திருந்தமை தொடர்பில் பல விமர்சனங்கள் எழுந்திருந்தன. இந்த நிலையில் கெல்லி சட்லர் நேற்று பதவ விலகியுள்டளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயல் அலுவலகத்தில் பணியாற்றி வந்த கெல்லி சட்லர் தற்போது அந்தப் பணியில் இல்லை எனவும் ஜோன் மெக்கெயினின் சேவையை நாடு மதிக்கிறது எனவும் இதுதொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ராஜ் ஷா தெரிவித்துள்ளார். இதேவேளை கடந்த மாதம், ஜோன் மெக்கெயினின் மகளை தொலைபேசியில் அழைத்து கெல்லி சட்லர் மன்னிப்பு கேட்க முயன்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.