ஏமன் கடல் பகுதியில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 46 பேர் மூழ்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. . ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பாவில் சட்டவிரோதமாக குடியேறி வருகின்றனர். இந்த நிலையில், எத்தியோப்பியாவை சேர்ந்த 100க்கு மேற்பட்ட அகதிகளுடன் சட்டவிரோதமாக ஒரு படகில் ஏமனுக்கு சென்று கொண்டிருந்த போது குறித்த படகு ஏமன் அருகே சென்றபோது கடல் கொந்தளிப்பு காரணமாக கடலில் மூழ்கியதில் 46 பேர் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து அங்கு சென்ற மீட்புப்படையினர் காணாமல் போயுள்ள 16 அகதிகளை தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஏமன் கடல் பகுதியில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 46 பேர் மூழ்கினர்…
200
Spread the love
previous post