ரம்ழான் நோன்பை முன்னிட்டு ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கனி தலிபான் தீவிரவாதிகளுக்கெதிராக தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளார். குறித்த தற்காலிக போர்நிறுத்தமானது 5 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும் எனவும் அவர் அறிவித்துள்ளார். இது தொடர்பில் தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஏனைய வெளிநாட்டு தீவிரவாத அமைப்புக்களான அல் கொய்தா மற்றும் ஐ.எஸ் அமைப்பினருக்கெதிரான போர் தொடர்ந்து நடைபெறும் எனவும் ராணுவத்தரப்பினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்
மேலும், வன்முறை மற்றும் போரினால் மக்களின் மனதை வெல்ல முடியாது எனவும் மாறாக பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதன் மூலம் மக்களிடம் இருந்து இன்னும் அந்நியப்படுத்தவே செய்யும் என்பதை தலிபான் கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அதற்கு, இந்த தற்காலிக போர் நிறுத்தம் அவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.
எனினும் என்பது தலிபான்கள் தரப்பிடம் இருந்துஇது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.