ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட இளைஞர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாக மத்தியஅமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் மத்திய உள்துறை அமைச்சர் , இன்று ஸ்ரீநகரில் உள்ள ஷெர் இ காஷ்மிர் உள்ளரங்கு மைதானத்தில் சுமார் 6 ஆயிரம் இளைஞர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தவறு செய்வது குழந்தைகளின் இயல்பு. அதனால், தவறாக வழிநடத்தப்பட்டு கல் வீச்சு சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற அரசாங்கம் முடிவு செய்துள்ளது எனத் தெரிவித்துள்ளார். மேலும் காஷ்மீர் இளைஞர்களின் எதிர்காலம் குறித்து மத்திய அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாகவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.