177
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
இலங்கைக்குள் செயற்கை மழையை பொழிய வைக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் நீர் மின் உற்பத்தி நிலையங்கள் அமைந்துள்ள இடங்கள் மற்றும் வறட்சி நிலவும் பகுதிகளில் மழையை பொழியவைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சீனாவுடன் இணைந்து மேற்கொள்ளப்பட உள்ள இந்த திட்டத்திற்கான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சர் தயா கமகே அமைச்சரவையில் தாக்கல் செய்திருந்தார். மேகங்களில் இரசாயனத்தை தெளிப்பதன் மூலம் செயற்கையாக மழையை பொழிய வைக்கப்பட உள்ளது.
Spread the love