குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்க முதலீட்டு வங்கிக்கு வழங்கப்பட்ட பணத்தை மீளப் பெற்றுக் கொள்ளும் முயற்சியில் மலேசிய அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. உலகின் முக்கியமான முதலீட்டு வங்கிகளில் ஒன்றான அமெரிக்காவின் கோல்ட்மான் சாக்ஸ் ( Goldman Sachs )வங்கிக்கு செலுத்தப்பட்ட கட்டணங்களை மீளப் பெற்றுக் கொள்ளும் முயற்சியில் மலேசியாவின் புதிய அரசாங்கம் தீவிரம் காட்டி வருகின்றது.
மலேசியாவின் கடந்த அரசாங்கம் பிணை முறிகளை விநியோகம் செய்திருந்தது. இந்த பிணை முறி விநியோகத்திற்காக அமெரிக்காவின் கோல்ட்மான் சாக்ஸ் வங்கிக்கு 600 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தப் பணத்தை மீளவும் பெற்றுக் கொள்ளும் முயற்சியிலேயே மலேசிய அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
1எம்டிபி (1MDP ) என்ற முதலீட்டு திட்டத்தின் காரணமாக பல பில்லியன் டொலர்கள் வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அதனை மீளப் பெற்றுக் கொள்ளும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது