குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
இலங்கை இராணுவத்தை 9 பிரிவுகளாக பிரித்து நாட்டில் உள்ள 9 மாகாணங்களில் நிலை நிறுத்துமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அரசாங்கத்திடம் யோசனை முன்வைத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அரச அலுவலகம் ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த யோசனையை அமுல்படுத்துவதன் மூலம் 9 மாகாணங்களுக்கு இராணுவப் பிரிவுகள் கிடைக்கும். வடக்கில் அதிக எண்ணிக்கையிலான இராணுவத்தினர் நிலை கொண்டிருப்பதை தமிழ் மக்கள் ஏற்க மாட்டார்கள். இதனால், மாகாணங்களுக்கு இராணுவத்தினரை பிரித்து அனுப்புவதன் மூலம் பிரச்சினையை தீர்க்க முடியும் எனவும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை வடக்கில் உள்ள எந்த காணிகளும் வடக்கு மாகாண சபையின் அனுமதியின்றி படையினருக்கு வழங்க போதில்லை என தெரிவித்திருந்த விக்னேஸ்வரன், அது தொடர்பான யோசனை ஒன்றையும் மாகாண சபையில் நிறைவேற்றியுள்ளார் என தெற்கின் சிங்கள ஊடகம் ஒன்று செய்தி அவளியிட்டுள்ளது.