குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னார் பேசாலை பிரதேச சபைக்கு உட்பட்ட காட்டஸ்பத்திரி பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10/06/2018) அதிகாலை பதுக்கி வைக்கப்பட்டிருந்த கேரளா கஞ்சா போதை பொருள் மீட்கப்பட்டுள்ளது. மன்னார் புலனாய்வு துறையினர் மூலம் பேசாலை காவல் நிலையத்திற்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து பேசாலை கால்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது தென்னை தோப்புக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 கிலோ 200 கிராம் கேரளா கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த கஞ்சா உள்ளூர் விற்பனைக்காகவா அல்லது வேறு பிரதேசத்துக்கு கொண்டு செல்வதற்காகவா பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாகவும் குற்றவாளிகள் தொடர்பாகவும் விசாரணைகளை பேசாலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர் .
குறித்த கடத்தல் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் கைப்பற்றபட்ட கஞ்சா இன்றைய தினம் (11/06/2018) மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளது.