கோலாலம்பூரில் நடைபெற்ற மகளிருக்கான இருபதுக்கு இருபது ஆசியக் கிண்ணப்போட்டியில் இந்திய அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து பங்களாதேஸ் அணி முதல் முறையாக சம்பியனாகியுள்ளது. நேற்றையதினம் நடைபெற்ற இறுதிப்போட்டியில் நடப்பு சம்பியனான இந்திய அணியை எதிர்கொண்ட பங்களாதேஸ் அணி . நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பினை தெரிவு செய்தது.
இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 112 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இதனையடுத்து 113 ஓட்டங்கள் என்னும் வெற்றி இலக்குடன் இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ஓட்டங்களைப் பெற்று 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆட்டநாயகி விருது ருமானா அகமதுவுக்கும், தொடர் நாயகி விருது ஹர்பிரீத் கவுருக்கும் வழங்கப்பட்டது