குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
தனுஸ்கோடி பகுதியில் பலத்த காற்று காரணமாக மணல் புயல் வீசி வருவதுடன் வீதிகள் அனைத்தும் மணல்களால் மூடப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் மற்றும் யாத்திரிகர்கள் அரிச்சல் முனைப்பகுதிக்கு செல்ல காவல்துறையினர்; தடை விதித்துள்ளனர். ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் கடந்த சில தினங்களாக பலத்த காற்று காரணமாக தனுஸ்கோடி பகுதியில் கடல் அலைகள் சுமார் 20 அடி உயரத்திற்கு எழும்புவதனையடுத்து அரிச்சல் முனைப்பகுதிக்கு செல்ல வரும் சுற்றுலா பயணிகள் தனுஸ்கோடி பகுதியுடன் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் பலத்த காற்று காரணமாக முத்திராயர் சத்திரம் முதல் அரிச்சல் முனைப்பகுதி வரை மணல் புயல் போல் வீசுவதால் வீதிகளில் இரண்டு சக்கர வாகனங்களிலும் பொதுமக்களும் நடத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் வீதிகள் மணலால் முடப்பட்டு வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பாம்பன் பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதால் பாம்பன் பாலத்தை கடந்து செல்லும் புகையிரதங்கள் அனைத்தும் சிறிது நின்று செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் சுற்றுலா செல்லும் மக்கள் ஆபத்தை உணராமல் ராட்சத அலைகளுடன் செல்பி எடுத்து கொண்டுள்ளனர்.