150
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஈராக்கிலிருந்து எல்லை தாண்டிய ஆறு பேர் ஈரானில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஈரானிய புரட்சிப் படையினரே இவ்வாறு எல்லை தாண்டியவர்களை சூட்டு வீழ்த்தியுள்ளனர். ஐ.எஸ் தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு முயற்சித்தவர்களே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது
இந்த தாக்குதல் சம்பவத்தில் மேலும் மூன்று கிளர்ச்சியாளர்கள் காயமடைந்துள்ளதாகவும் மேலும் ஆயுதங்கள், வெடிபொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களிலும் 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love