128
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னார் நகர மத்தியஸ்தர் சபைக்கான புதிய உறுப்பினர்களுக்கான நியமன கடிதங்கள் இன்று(11) திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டதோடு, மன்னார் நகர புதிய மத்தியஸ்தர் சபை அங்குரார்ப்பணமும் செய்து வைக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தலைமையில் நியமனக்கடிதம் வழங்கி, புதிய மத்தியஸ்தர் சபை அங்குரார்ப்பணமும் செய்து வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் நகர மத்தியஸ்தர் சபைக்கு 14 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதன் தலைவராக எம்.சிவானந்தன் நியமிக்கப்பட்டுள்ளதோடு, உப தலைவராக திருமதி. நிஸாந்தினி ஸ்ரான்லி ஜோஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
Spread the love