சந்தேக நபர்கள் தரப்பு சட்டத்தரணி, மன்றில் உரைத்தார்…
கொக்குவில் வாள்வெட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் திங்கட்கிழமைவரை (18.06.18) விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கொக்குவிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த வாள்வெட்டடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில், காவற்துறையால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டவர்கள் இருவரும் பாதிக்கப்பட்டவர்கள். அவர்கள் இருவரும் தாக்குதலுக்கு உள்ளானவர்கள். முறைப்பாட்டாளரும், மற்றும் அவருடன் இணைந்தவர்களுமே> இவர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். என யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் சந்தேக நபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தமது பக்க வாதத்தை முன்வைத்தார். இதனை அடுத்து வாள்வெட்டு தொடர்பில் முறையிட்ட முறைப்பாட்டாளர்> எதிர்வரும் 18 ஆம் திகதி மன்றில் முன்னிலையாக வேண்டும் என்ற அழைப்பாணை உத்தரவையும் நீதிபதி பிறப்பித்தார்.