குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…..
அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய தினம் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை சந்திக்க உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்த போதிலும் அப்படியான சந்திப்பு தொடர்பாக தனக்கு அறிவிக்கப்படவில்லை என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கோத்தபாய ராஜபக்ச வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை கூறியுள்ளார்.
தொழில் வல்லுநர்கள், வர்த்தகர்கள், அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு தரப்பினர் தன்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவது வழமையானது என்ற போதிலும் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளை போல் இன்றைய தினம் எந்த அதிகாரபூர்வமான சந்திப்பு நடக்காது எனவும் கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.
Spread the love
Add Comment