216
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…..
சர்வதேச மன்னிப்புச் சபை தெற்காசியாவுக்கான தனது தலைமையகத்தை இலங்கையில் ஸ்தாபிக்க தயாராகி வருகிறது. லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சர்வதேச மன்னிப்புச் சபை கடந்த 1961 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. உலகம் முழுவதும் ஆறு இடங்களில் அலுவலங்களை திறக்க சர்வதேச மன்னிப்புச் சபை தீர்மானித்துள்ளதுடன் அதில் ஒரு அலுவலகத்தை கொழும்பில் திறக்க முடிவு செய்துள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக போர் குற்றங்களை சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love