சிங்கப்பூரில் நடைபெற்ற வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பின் நிறைவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் இருவரும் அமைதிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இன்றையதினம் சிங்கப்பூரில் உள்ள சென்தோசா தீவில் உள்ள கெபெல்லா விடுதியில் இரு தலைவர்களுக்கு இடையில் இடமபெற்ற சந்திப்பின்போது அணு ஆயுத ஒழிப்பு, பொருளாதார தடை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது.
இந்த சந்திப்பு எதிர்பார்த்ததைவிட சிறப்பாக அமைந்ததாகவும், மிகப்பெரிய பிரச்சனைகளை தீர்க்க முடியும் எனவும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ள நிலையில் இதேபோல் கிம் ஜாங் உன்னும் சாதகமான கருத்தையே தெரிவித்துள்ளார். அதன்பின்னர், இரு நாடுகளிடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில், டிரம்ப், கிம் ஜாங் உன் இருவரும் கையெழுத்திட்டுள்ளனர். இந்த ஒப்பந்தத்தில் உள்ள அம்சங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.
எனினும் அமைதி மற்றும் நட்புறவு தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஒப்பந்தமாக இருக்கலாம் என கருதப்படுகின்றது