இந்தியாவின் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பில் மகாராஷ்டிராவை சேர்ந்த பரசுராம் என்பவர் இன்று கைது செய்யப்பட்டார். பெங்களூரில் வசித்து வந்த 55 வயதான பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி இரவு இனந்தெரியாத நபர்களினினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இப் படுகொலை வழக்கை கர்நாடக உளவுப் பிரிவு ஐ.ஜி. பி.கே.சிங் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகின்றது.அத்துடன் கொலையுடன் தொடர்புடைய முக்கிய நபரான மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த நவீன்குமார் என்பவர் கைது செய்யப்பட்டதுடன் அவரிடமிருந்து நவீன ரக துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டது.
சந்தேக நபரான நவீன்குமார் அளித்த வாக்கு மூலத்தில் கொல்லேகால் காட்டுப் பகுதியில் 4 பேரை காரில் அழைத்து வந்து சதித்திட்டம் தீட்டியதாக கூறியுள்ளார். 4 பேரும் இந்தி பேசுகின்ற இளைஞர்கள் என்றும் அவர் தெரிவித்தார். இதன் அடிப்படையில் சிவமோகாவைச் சேர்ந்த நவீன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையிலே மற்றுமொரு சந்தேக நபரான மராட்டிய வாலிபர் பரசுராம் வாக்மரே என்பவரை n காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.