159
உத்தர பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்று சாலைத் தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 25 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். இன்று காலை குறித்த தனியார் பேருந்து நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த போது பேருந்து திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதி கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மக்கள் மற்றும் காவல்துறையினர் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.
Spread the love